கடலுக்கு மத்தியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகாய் ஜொலித்துக் கொண்டிருக்கிறது “மிக்கோநொஸ் தீவுகள்”.கிரேக்க தீவுகளில் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான மிக்கோநொஸ் தீவுகள் ஏகன் கடலின் மத்தியில் அமைந்துள்ளது.
மிக்கோநொஸ் தீவுகளின் நான்கு திசைகளிலும் அமைந்துள்ள கடற்கரைகளில் ஓய்வெடுக்கவே ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஆயிரக்கணக்கில் சுற்றுலாவாசிகள் படையெடுக்கின்றனர்.
85.5 சதுர மீட்டரில் விரிந்து அமைந்துள்ள இந்த தீவு கடல்மட்டத்தில் இருந்து அதிகளவில் சுமார் 341 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
2011 கணக்கெடுப்பின் படி சுமார் 10,134 மக்கள் வாழும் இந்த தீவின் புனைபெயர் ”காற்றின் தீவுகள்” ஆகும்.
வருடத்தில் சுமார் 300 நாட்களும் வெயில் மட்டுமே அடிக்கும் இந்த தீவில் காற்றுக்காக மட்டுமே சுற்றுலாவாசிகள் கூடுகின்றனர்.
பெப்ரவரி-மார்ச் மாதம் இடையே மட்டுமே இங்கே மழைப் பொழிவை காண முடியும்.
மிக்கோநொஸ் நகரத்தில் இருந்து தென் கிழக்கு பகுதியில் 4 கி.மீ தொலைவில் தான் மிக்கோநொஸ் விமான நிலையம் அமைந்துள்ளது.
கோடைகாலத்தில் சுற்றுலவாசிகளுக்காக சர்வதேச விமான சேவைகள் அதிகளவில் இயங்குகிறது. மேலும் ஏதன்ஸில் இருந்து மிக்கோநொஸ் தீவுகளுக்கு விமானப் பயணம் 25 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், டாக்ஸிகள், பேருந்துகள் மற்றும் படகுகள் என அனைத்து வகையான போக்குவரத்து வாகன வசதிகளும் இடம்பெற்றுள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply