16
வயது சிறுமியை விடுதலை செய்வதற்கு 20 லட்சம் ரூபா கப்பம் கோரிய சம்பவம்
தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.தனது மகளை விடுதலை செய்வதற்கு இளைஞன் ஒருவரால் 20 லட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டதாக, சிறுமியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
சிறுமியை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 21 வயதான இளைஞன் ஒருவர் வௌ்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர் மற்றும் கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமி ஆகியோர் மத்துகம பகுதியில் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதுவொரு உண்மையான கடத்தல் சம்பவமா என்பது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கப்பம் பெறுவதற்கு உதவிபுரிந்த முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply