blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, May 20, 2014

மேக்கிந்திய தீவுகளின் அடுத்த பிரையன் லாரா ”கர்ஸ்டன் காளிசரண்” (Photos)


மேக்கிந்திய தீவுகளின் அடுத்த பிரையன் லாரா ”கர்ஸ்டன் காளிசரண்” (Photos)மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் பல பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளது. அதில் பிரையன் லாரா குறிப்பிடத்தக்கவர்.
தனது துடுப்பாட்டத்ததால் ஓட்டங்களை குவிப்பதில் அவருக்கு நிகர் அவரே.

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு இன்னொரு பிரையன் லாரா கிடைத்துவிட்டதாக சர்வதேச தகவல்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

கர்ஸ்டன் காளிசரண் (Kirstan Kallicharan) என்ற 14 வயது இளம் வீரர் டிரினிடாட் டொபாகோ 15 வயதுக்குட்பட்டோர் அணியின் தலைவர். இவர் மே மாதம் 11ஆம் திகதி போர்ட் ஒப்ஸ்பெயின் மைதானத்தில் 35 ஓவர்களில் 404 ஓட்டங்களைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட்டி போட்டியில் விஷ்ணு போய்ஸ் இந்து கல்லூரிக்காக விளையாடிய கர்ஸ்டன் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
வொலென்சியா உயர் பாடசாலை அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 44 பௌண்டரிகள் 31 சிக்சர்கள் அடங்களாக 404 ஓட்டங்களைப் பெற்றுள்ளார் கர்ஸ்டன்.

இவர் ஏற்கனவே லாராவின் பாடசாலை கால கிரிக்கெட் சாதனையையும் முறியடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ஸ்டன் காளிச்சரண் ஆட்டத்தைப் பார்த்து டிரினிடாட் அன்ட் டொபாகோ விளையாடுத் துறை அமைச்சர் பாராட்டியுள்ளார்.

சிறுவன் 404 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட விதம் தனக்கு பிரையன் லாரா என்பதுகளில் விளையாடிய உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
BnehfSnIUAAzqz1 BmKMSspIgAArXwB BmKMdIZIUAA-Qdr
Photos :- @KrisKallicharan

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►