ஆசியாவின்
உள்ளக செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள்
தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்றிரவு
சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.சீனாவின் ஷங்காய் நகரில் ஆசியாவின் உள்ளக செயற்பாடுகள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாடு ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு தெரிவித்தது.
நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் அமைதியான மற்றும் நிலையான ஆசியாவை கட்டியெழுப்புதல் என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு இம்முறை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
இலங்கையை தவிர பங்களாதேஷ், இந்தோனேஷியா, ஜப்பான், மலேஷியா, பிலிப்பைன்ஸ், கட்டார், யுக்ரெய்ன் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகள் மாநாட்டை கண்காணிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளன.
இம்முறை மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் கலந்துகொள்ளவுள்ளார்.
மாநாட்டில் பின்னர், பல அரச தலைவர்களுடன் சீனாவில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.
No comments:
Post a Comment
Leave A Reply