நடைபாதைவாசிகள் மீது காரை ஏற்றிய வழக்கில் நடிகர் சல்மான் கானிற்கு எதிராக ஹோட்டல் பணியாளர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.மும்பை புறநகர்ப் பகுதியான பாந்த்ராவில் உறங்கிக் கொண்டிருந்த நடைபாதைவாசிகள் மீது சல்மான் கான் காரை ஏற்றிய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு கடந்த பல வருடங்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஐந்து நட்சத்திர விடுதி பணியாளர் ஒருவர் நேற்று சாட்சியமளித்தார்.
அவர் தனது சாட்சியத்தில், சல்மான் கான் உள்ளிட்ட அவரது நண்பர்களுக்கு தான் மதுபானங்களை பரிமாரியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சல்மான் மது அருந்தினாரா? என்பது தனக்குச் சரியாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
விடுதியில் போதிய வெளிச்சம் இல்லை, அதனால் யார் யார் குடித்தார்கள் என்பதை என்னால் சரியாகப் பார்க்க முடியவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு சாட்சியான பொலிஸ் கான்ஸ்ரபிள் லஷ்மண் மோர் கூறுகையில், “சல்மான் கானும் அவரது சகோதரர் சொகைலும் பாருக்குச் சென்றனர். சகோதரர் சொகைல் நள்ளிரவில் வீடு திரும்பினார். ஆனால் காலை 3 மணியாகியும் சல்மான் திரும்பவில்லை, அப்போது ஒருவர் வந்து எங்களிடம் சல்மான் காரை நடைபாதைவாசிகள் மீது ஏற்றிய சம்பவத்தைக் கூறினார்” என்றார்.
2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் திகதி நடந்த இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியாக 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கு விசாரணை இன்றும் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply