இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட்டுக்களால் இந்திய அணி வெற்றியீட்டியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. ஆரம்ப வீரர்களான குசல் பெரேரா (0), திலஹரத்ன டில்ஷான் (35) ஆகியோர் கைகொடுக்காத போதும், மெத்தியூஸ் மற்றும் சங்கக்கார வலுசேர்ந்தனர்.
குமார் சங்கக்கார நேற்றைய போட்டியில் தனது 87வது அரைச்சதத்தைப் பதிவு செய்ததோடு உமேஷ் யாதவின் பந்துவீச்சில் 61 ஒட்டங்களைப் பெற்ற நிலையில் வெளியேறினார்.
எனினும் இறுதி வரை களத்தில் இருந்த அஞ்சலோ மெத்தியூஸ் அதிரடியாக ஆடி 92 ஓட்டங்களை விளாசினார். 50 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை 274 ஓட்டங்களை குவித்தது.
இதனை அடுத்து, 275 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி சார்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெஹானே எட்டு ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் வெளியேறினார்.
எனினும் சிறப்பாக ஆடிய ஷகீர் தவான் 79 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார், அம்பட்டி ராயுடு 121 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இறுதிவரை களத்தில் இருந்து இலங்கை வீரர்களுக்கு பெரும் சவாலாக விளங்கினார்.
44.3 ஓவர்களில் 275 எனும் இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி நான்கு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்திருந்தது.
இதனால் 33 பந்துகள் கைவசம் இருக்க 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி இந்தியா வசமானது, இதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 விமானிகள் இறந்தனர். தலைநகர் இஸ்லாமா...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
No comments:
Post a Comment
Leave A Reply