பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் லாகூர் அருகே உள்ல
கசூர் மாவட்டத்தில் செங்கல் சூளை அருகே வாழ்ந்து வந்த 6 பேர் அடங்கிய
கிறித்தவ குடும்பம் ஒன்று இஸ்லாமியர்களின் புனித நூலான குரானைத் தீயிட்டுக்
கொளுத்தி அதனை அவமதித்து விட்டதாகத் தகவல் பரவியிருந்தது.இதனை அடுத்து அக்கிராமத்தில் ஒன்று கூடிய மக்கள் கூட்டம் அக்குடும்பத்தின் தலைவர்களான தம்பதியினரை அடித்து உதைத்தது மட்டுமல்லாது தீயில் வீசிக் கொலை செய்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் பரவியிருந்தன.
இதனை அடுத்து இந்த இரக்கமற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதுடன் 40 பேர் கைது செய்யப் பட்டும் உள்ளனர்.
கொல்லப் பட்ட தம்பதியினரில் பெண் ஷைமான் பிபி உர்ஃப் ஷமர் எனவும் அவரின் கணவர் சஜாட் நாசிர் ஷுர்ஜா நசிர் நசிர் எனவும் அடையாளப் படுத்தப் பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இயங்கி வரும் மனித உரிமைகள் கமிசனான HRCP கூறுகையில் சம்பவம் நடந்த இடத்துக்கு தமது குழு ஒன்று அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாகவும் கொல்லப் பட்ட தம்பதியினருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் இருப்பதாகவும் கொல்லப் பட்ட பெண்மணி கர்ப்பமுற்றிருந்தார் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த கொலைச் சம்பவம் தம்மை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் இது குறித்துத் தமது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்கவில்லை என்றும் கூட HRCP தெரிவித்துள்ளதுடன் கொல்லப் பட்ட தம்பதியினர் குரானை எரித்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்கனவே இஸ்லாம் மதம் மீதான அவமதிப்பை மேற்கொள்பவர்கள் மீது மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப் படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அங்கு இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு இச்சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதுடன் இச்சட்டம் அங்கு பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் கொலை போன்ற குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாக உள்ளது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply