எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படவுள்ளது. இத்தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொருவரினதும் உரிமையாகும்.
எனவே, இதன் அடிப்படையில் நம்நாட்டு முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாக வேண்டிக் கொள்கின்றது.
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வோர் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து நிச்சயம் ஈடேற்றம் பெறுவர் என்பது உண்மையாகும். நபிமார்களின் வரலாறு இதற்குச் சான்றாகும். எனவே, முஸ்லிம்கள் பெரும்பாவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும், அல்லாஹுதஆலாவுடனான தமது தொடர்பைச் சீராக்கிக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இபாதத்துக்களில் அதிகளவு தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் வேண்டும். நிச்சயமாக நமது நல்லமல்கள் முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் நாட்டு மக்களுக்கு பொதுவாகவும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் என்பது உறுதியான விடயமாகும்.
ஜனநாயக நாடொன்றில் பலதரப்பட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடலாம் என்பது அனைவரும் அறிந்ததே. எவரும் தான் விரும்பும் வேட்பாளரை ஆதரிப்பது அவரது உரிமையாகும்.
இந்நிலையில் 90 வருடங்களை கடந்து இயங்கிவரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு அரசியல் சாயத்தையும் பூசிக்கொள்ளாத நிறுவனம் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். எனவே, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயல்பட மாட்டாது.
எனவே, எவரும் ஜம்இய்யாவின் பெயரைப் பயன்படுத்தி பிரச்சாரங்கள் செய்ய வேண்டாம் என ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது. எனினும், காலத்தின் தேவையைக் கருத்திற்கொண்டும் முஸ்லிம்களின் உரிமைகளையும் நலன்களையும் பெற்றுக் கொள்ளவும் ஆட்சியிலுள்ள, ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்று பல தரப்பினர்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழும் இந்நாட்டில் முஸ்லிம்களது உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமையுடனும் புத்திசாலித்தனமாகவும் நடந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப் படுத்துவோர் தக்வா, அமானிதம் பேணுதல் மற்றும் தூரநோக்கு போன்ற உயர்ந்த பண்பாடுகளைக் கொண்ட முன்மாதிரியானவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராக பல தீய சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில், சுயலாபங்களை மறந்து, தமக்குள் திட்டிக் கொள்வதை நிறுத்தி, கட்சி பேதங்களை ஓரங்கட்டி, பொது இலக்குகளை நோக்கியும் பொது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையிலும் செயற்பட வேண்டும் என்று முஸ்லிம் அரசியல்வாதிகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாக வேண்டிக் கொள்கின்றது.
தேர்தல் காலங்களில் பிரச்சினைகள், அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் ஒழுக்க விழுமியங்களைப் பேணி நடந்துகொள்ளுமாறு அரசியல்வாதிகள் உட்பட அனைத்து தரப்பினர்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாக வேண்டிக் கொள்கின்றது.
தேர்தல் நடைபெறும் நாட்களில் வீண் பிரச்சினைகளிலும் தர்க்கங்களிலும் ஈடுபடுவதையும் பொய் வதந்திகளை பரப்புவதையும் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் நடந்துகொள்வதையும் தவிர்ந்துகொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களையும் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றது.
மேற்கூறப்பட்ட அறிவுறுத்தல்களைக் கவனத்திற்கொண்டு ஆலிம்கள், குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேச கிளைகள் பொதுமக்களை வழிநடாத்த வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் பாழில் பாரூக்
செயலாளர் – ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, November 25, 2014
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் செய்தி!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று காலை வந்துகொண்டிருந்த தனியார் பஸ், அம்மாபேட்டை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது...
No comments:
Post a Comment
Leave A Reply