அல் கய்தா
தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றவராக அறிவித்திருக்கும் அமெரிக்க
முன்னாள் நேவி சீல் வீரர் ரொபட் ஓனைல், அந்த சம்பவம் குறித்து பொக்ஸ்
நியுஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அல் கய்தா தலைவரை தாமே
இறுதியாக பார்த்தவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு
பாகமாக ஒளிபரப்பப்பட்ட இந்த பேட்டியில் முதல் பாகம் கடந்த செவ்வாய் இரவு
வெளியானது. “அவரை கடைசியாக பார்த்தவராக இடம்பிடிப்பதற்கு அங்கு போதுமான
வெளிச்சம் இருந்தது” என்று ஓனைல் குறிப்பிட்டுள்ளார்.
பின்லேடனை
சுடுவதற்கு முன்னர் நான் அவரது கண்களை நேராக பார்த்ததாக ஓனைல்
விபரிக்கிறார். “எனக்கு இரண்டு அடிக்கு முன்னால் அவர்
நின்றுகொண்டிருந்தார்.
அவரது கையை மனைவி பற்றிக்கொண்டிருந்தார். அந்த
முகத்தை நான் ஆயிரக்கணக்கான தடவைகள் பார்த்திருக்கிறேன். நாம் அவரை
பிடித்துவிட்டோம். இந்த யுத்தத்தை எம்மால் முடிக்க முடியும் என்று நான்
அப்போது நினைத்துக் கொண்டேன்” என்கிறார் ஓனைல்.
பீஸ்ஸா
விநியோகிப்பவராக இருந்து நேவி சீல் படையில் இணைந்த அனுபவங்கள் குறித்து
இந்த பேட்டியில் ஓனைல் விபரித்துள்ளார்.
ஒசாமாவை பிடிக்கும் ஜனாதிபதி
ஒபாமாவின் உத்தரவை அடுத்து அதற்காக செல்லும் முன்னர் தாம் கொல்லப்படுவது
அல்லது பிணைக்கைதியாக பிடிபடும் அபாய சூழலில் தனது தந்தையுடன் கடைசியாக
தொலைபேசியில் உரையாடியது மற்றும் மனைவி குழந்தைகளுக்கு கடிதம் எழுதிய
அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
உலக வர்த்தக
மையம், பென்டகன், பென்சில்வேனியாவில் தமது அன்புக்குரியவர்களை இழந்த
அமெரிக்கர்களின் எதிர்பார்ப்பை மூன்று துப்பாக்கி குண்டுகள் முடிவுக்கு
கொண்டுவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இது எனது
வாழ்நாளின் சிறந்த செயலா அல்லது மோசமான செயலா என்பதை கண்டறிய இன்றும் நான்
முயற்சித்து வருகிறேன்” என்றும் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பின்லேடனை பிடிக்கும் வெற்றிகரமான நட வடிக்கையில் முக்கிய பங்கை
வகித்ததையிட்டு ஓனைல் பெருமை வெளியிட்டுள்ளார்.
ஒசாமாவை
பிடிக்கும் இராணுவ நடவடிக் கைக்காக 2011 பயிற்சிக்கு அழைக்கப்பட்டபோது
தாமும் ஏனைய சில வீரர்களும் விபரம் அறியாமல் பயிற்சியில் ஈடுபட்டதையும்
அவர் குறிப் பிட்டுள்ளார்.
அப்போது அரபு வசந்தம் ஏற்பட்டிருந்ததால் லிபிய
சர்வாதிகாரி முஅம்மர் கடாபியை பிடிக்கவே பயிற்சியில் ஈடுபடுவதாக ஓனைலும்
ஏனைய வீரர்களும் நம்பியிருந் துள்ளனர்.
இதன்போது
ஒசாமா தங்கியிருந்த அபோதா பாத் வளாகத்தை போன்ற மாதிரி கட்டடம் ஒன்றிலேயே
வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இதன் போது வீரர்கள்
பிரிக்கப் பட்டு பயிற்சியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.
ஒருசில வீரர்கள் வளா
கத்தின் மதில் சுவரக்கு உள்ளேயும், மற்றும் ஒரு குழு அருகில் இருப்
போரிடம் இருந்து பாது காக்க வெளியிலும் மேலும் ஒரு குழு கூரை பகுதியிலும்
பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான
இராணுவ நடவடிக்கைகளில் ஓனைல் பொதுவாக வெளிப்பகுதியின் பாதுகாப்புக்கு தலைமை
வகிப்பவராகவே செயற்பட்டிருக்கிறார். எனினும் இந்த வளாகத்தின் மேல்
மாடியிலேயே ஒசாமா தங்கியிருப்பதை சி.ஐ.ஏ. முகவர் கண்டறிந்ததை அடுத்து அந்த
அபாயகரமான பணியை செய்ய ஓனைல் முன்வந்துள்ளார்.
இது ஒரு
அபாயகரமான இராணுவ நடவடிக்கை என்று தெரிந்ததும் அதில் பங்கேற்ற அனைத்து
வீரர்களும் தமது குடும்பத்தினருக்கு இறுதியாக கடிதம் எழுதியுள்ளார்கள்;.
“நாம் இதற்காக அதிகம் பயிற்சியில் ஈடுபட்டபோதே இது ஒரு வழிய இராணுவ
நடவடிக்கையாக இருக்கும் என்று உணந்து கொண்டோம்” என்று ஓனைல்
குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply