blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, November 15, 2014

சமாதான பூமியை மீண்டும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல முயற்சிப்போரை எதிர்க்க இளைஞர்கள் அணிதிரள வேண்டும்: நாமல் ராஜபக்ஷ!

???????????????????????????????முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சமாதான பூமியாக மாற்றப்பட்டுள்ள எமது நாட்டை மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல முயற்சிப்பவர்களுக்கு எதிராக இளைஞர்கள் அணிதிரள வேண்டும் என இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சூளுரைத்தார்.


அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீல அலை இளைஞர் படையணியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
கல்முனை பிரதேசத்திற்கான பிரதான நிகழ்வு கல்முனைத் தொகுதி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்த இளைஞர் மாநாட்டைத் தொடர்ந்து கல்முனைக்குடியில் அலுவலகம் ஒன்றையும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ திறந்து வைத்தார்.
அத்துடன் நற்பிட்டிமுனை, திருக்கோவில் போன்ற தமிழ் பகுதியிலும் இளைஞர் மாநாடுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்ன, பிரதி அமைச்சர் சரத் வீரசேகர, மக நெகும தவிசாளர் கிங்ஸ்லி ரணவக்க உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுகளில் கலந்து கொண்ட நாமல் ராஜபக்ஷ மேலும் பேசுகையில் கூறியதாவது;
ஒரு கட்சியின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது. அங்கு அவர்களுக்குரிய இடம் வழங்கப்பட வேண்டும். 
பதவிக்கு வரும் வரை மட்டும் அவர்களது தயவை பெற்று விட்டு பின்னர் நட்டாற்றில் கைவிடும் கொள்கை அரசியல் கலாசாரம் ஆகாது.
நாளைய தலைவர்களாகிய இன்றைய இளைஞர்களை சரியாக வழிநடத்த வேண்டிய பாரிய கடப்பாடு அரசியல் தலைமைகளுக்கு இருக்கிறது. இல்லாத பட்சத்தில் கடந்த காலங்களில் வடக்கிலும், தெற்கிலும் ஏற்பட்ட இளைஞர் கிளர்ச்சிகள் மீண்டும் தலைதூக்குவதை தவிர்க்க முடியாது போய்விடும்.
இளைஞர்களின் தேவைகள், அபிலாஷை, உணர்வுகளை உணர்ந்து செயல்பட்டால் மாத்திரமே சமாதானத்தை நிரந்தரமாக்கி கொள்ள முடியும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இளைஞர் சமூதாயத்தை மதிக்கும் ஒரு கட்சி. அவர்களது உரிமைகளை கட்டிக்காக்கும் ஒரு கட்சி. 
ஆட்சிக்கு வரும் வரை ஏமாற்றி ஆட்சியை அமைத்த பின் இளைஞர்களை உதறித்தள்ளும் குணம் இந்தக் கட்சியிடம் கிடையாது.
இன்று நாட்டை அபிவிருத்தி செய்கின்ற ஒரு கட்சியை மக்கள் சரியாக தெரிவு செய்ய வேண்டும். தெரிவு பிழையாக இருந்தால் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது” என்றார்.
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????BR (2)BR (4)BR (1)

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►