வெறுப்புமிக்க அரசியலினால் நாட்டுக்கு எவ்விதமான பலனும் இல்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியில் எவரையும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் எமது அருகில் இருந்த ஒருவரை அந்த பக்கம் அழைத்துச் சென்றுள்ளனர். நேற்றிரவும் என்னுடன் இருந்தார். அதுவும் சிறந்ததாகும். தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கே வாக்களிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் வெறுப்புடன் அரசியலில் ஈடுபட முடியாது. அரசியல் வெறுப்பையே அவர்கள் தீர்த்துக்கொள்கின்றனர். இம்முறையும் நானா வேட்பாளரை தெரிவு செய்து அனுப்பி வைத்தேன் என என்னிடம் யாரோ கேட்டார்கள். இது போட்டியொன்று அல்ல. இது தொடர்பில் பேசுவதில் பயனுமில்லை. அதனால் இது தொடர்பில் நான் பேசப்போவதில்லை. நாம் சேவையாற்றியுள்ளோம். நாட்டை விடுதலை செய்துள்ளோம். யுத்தத்தை நிறுத்தினோம். எமது இந்த பயணத்தை தடுப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்பதை நாம் தெளிவாக கூறுகின்றோம்.
No comments:
Post a Comment
Leave A Reply