வெள்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான கடற்கரையோர வீதிகளில், இன்று முதல் விஷேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வார நாட்களில் மாத்திரம் மீள அறிவிக்கப்படும் வரை இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி காலை 07.00 மணி முதல் 09.30 வரை வெள்ளவத்தை கடற்கரைப் பகுதிகளில் நெல்சன் வீதி சந்தியில் இருந்து சார்லிமன்ட் சந்தி வரை கொழும்பு நோக்கி மட்டும் வாகனப் போக்குவரத்து இடம்பெறவுள்ளது.
அதேபோல் மாலை 04.00 மணிமுதல் 06.30 வரை வெள்ளவத்தை கடற்கரை வீதியின் சார்லிமன்ட் சந்தியில் இருந்து நெல்சன் வீதி சந்தி வரை தெஹிவளை நோக்கிச் செல்லும் வாகனப் போக்குவரத்துக்கள் மட்டும் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாதை புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த நடவடிக்கை நடைமுறையில் இருக்காது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, October 13, 2014
கொழும்பு கரையோரப் பகுதிகளில் விஷேட போக்குவரத்துத் திட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
என்னுடன் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கு முடியுமா? அவர் எனக்கு எவ்வகையிலும் ஒரு சவாலாக இருக்கவே முடியாது.
-
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தின் அனைத்து கல்விசார் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டிருப்பதாக கிழக்கு பல்...
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
சிறுநீரக சிகிச்சை நிலையமொன்றை அமைத்துக் கொடுக்க சீனா இணக்கம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply