இதனால் தமிழக தியேட்டர் உரிமையாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்தலைவர் தொல்திருமாவளவன் விடுத்திருக்கும் எச்சரிக்கை அறிக்கை இங்கே தரப்பட்டுள்ளது.
அவர் தனது அறிக்கையில் நாங்கள் விஜய்க்கும், முருகதாசுக்கும் எந்த விதத்திலும் எதிரிகள் அல்ல என்றும், தமிழினத்துரோகி ராஜபக்சேவின் பினாமி நிறுவனமான லைகா நிறுவனத்திற்குத்தான் எதிரி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கடைசி நேரத்தில் திடீரென தொல்.திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
Leave A Reply