blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, October 20, 2014

தனது நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டால் 24 மணிநேரத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவாராம் மஹிந்த!

தனது நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டால் 24 மணிநேரத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவாராம் மஹிந்த!நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்காக தான் கடந்த வாரம் விடுத்திருந்த, ''பிரிவினைவாதத்தை விடுதலைப்புலிகள் சார்பு புலம்பெயர்தமிழர்களும், தமிழ்தேசியக் கூட்டமைப்பும் கைவிடவேண்டும்'' என்ற நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டால் 24 மணிநேரத்துக்குள் தனது உறுதிமொழியை நிறைவேற்ற தான் தயார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-

புலம்பெயர் தமிழர்களினதும், தமிழ்தேசிய கூட்டமைப்பினதும் முக்கிய நிபந்தனையாக நிறைவேற்று அதிகார முறை ஒழிப்பு காணப்படுகிறது.

எனது நிபந்தனைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டால், அமைச்சரவை ஊடாக நான் எனது உறுதிமொழியை நிறைவேற்றுவேன்.

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் மீன்பிடித்தடை போன்றவற்றின் பின்னணியில் மறைமுக சக்தியொன்று உள்ளது.

எதிர்க் கட்சிகளும், புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்தொடர்ச்சியே இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைகள்.

எதிர்கட்சி தலைவர் வெளிநாடு சென்று புலம்பெயர் அமைப்புகளை சந்தித்து இரு வாரத்துக்குள் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய நீதிமன்று நீக்கியுள்ளது. ஐரோப்பாவிலிருந்து கொண்டு புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இலங்கை மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.- என்றார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►