ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்தால் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். அத்துடன் ஓய்வூதிர்களுக்கு 2 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உறுதி தெரிவித்திருக்கிறார்.
ஜெயவர்த்தனபுரக் கோட்டேயில் நேற்று இடம்பெற்ற கட்சிக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் - சம்பா அரிசி 50 ரூபாவாகவும், நாட்டரிசி 45 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என்றும் பெற்றோல் 50 ரூபாவாலும், டீசல் 15 ரூபாவாலும் விலை குறைக்கப்படும் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply