blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, October 19, 2014

ரணில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்: மஹிந்த நேரடி குற்றச்சாட்டு!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் இவ் வேளை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கியுள்ளது இதனை மஹிந்த ராஜபக்சவும் அவரது ஆளும் கட்சியினரும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.  

அதன் பொருட்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஐரோப்பிய விஜயம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவே என மஹிந்த ராஜபகச நேரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

விடுதலைப் புலிகள் விடயத்தை கையில் எடுத்தால் பெரும்பான்மை சிங்களவர்களின் வாக்குகளை பெற்று மூன்றாவது முறையும் ஆட்சிக்குவரலாம் என்பது மஹிந்தவிற்கு நன்கு தெரியும் அந்த வகையில் காகம் இருக்க பனம்பழம் விழுந்தது போல் ரணிலின் ஐரோப்பிய பயணம் ஆகிவிட்டது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இனவாத அமைப்பான பொதுபல சேனாவிற்கு ஆதரவான பௌத்த பிக்குகளுக்கு அறநெறிப் பாடசாலை ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் அலரிமாளிகையில் நடைபெற்றது.

அதில் 5000 பெளத்த பிக்குமார் கலந்து கொண்டனர். அவர்கள் முன்நிலையில் உரையாற்றும்போதே மஹிந்த ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய மஹிந்த, ரணில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளின் ஆதரவாளர், அவர் ஐரோப்பாவிற்கு விஜயம் செய்து இரண்டு வாரத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கனவான தனித் தமிழ் ஈழத்தை அமைக்கும் நோக்கில் தற்போதும் புலம்பெயர் நாடுகளில் நிதி சேகரிப்பு நடைபெறுகின்றது.

எனினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் நான் இருக்கும் வரை ஈழம் என்பது கனவாகவே இருக்கும்.

அதன் காரணமாகத் தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ரத்துச்செய்ய முயற்சிக்கின்றார்கள்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ரத்துச் செய்யப்பட வேண்டியதுதான், ஆனால் அதற்காக புலம் பெயர் தமிழர்களினதும், விடுதலைப் புலிகளினதும் தேவைக்காக அதனைச் செய்ய முடியாது.

நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுக்கக் கூடாது, மக்கள் மத்தியில் செல்வாக்கைக் கட்டியெழுப்பி, அதன் மூலமாகவே அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.

ஆனால் இன்று நாட்டைக் காட்டிக் கொடுத்து அதிகாரத்துக்கு வரும் நோக்கில் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. அவற்றுக்கு இடமளிக்கக் கூடாது  என மஹிந்த தனது உரையில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►