எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, October 5, 2014
ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே இருந்தது வெறும் பிசினஸ் பந்தம்தான் : நீதிபதி கருத்து
ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே இருந்தது சொந்த உறவு அல்ல, வெறும் பிசினஸ் பந்தம்தான் என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பில் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுடன் அவரது வீட்டில் சசிகலா, இளவரசி ஆகியோர் தங்கியுள்ளனர். வாடகைக்கு அல்ல. இலவசமாகவே அவர்களை ஜெயலலிதா தங்க வைத்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சசிகலாவும் இளவரசியும் சொந்தமே இல்லை. அப்படி இல்லாதபோது எப்படி ஒரே வீட்டில் தங்கியிருந்துள்ளனர் என்பதற்கு எந்த பதிலும் வரவில்லை. இந்த மூன்று பேரும் சேர்ந்து கம்பெனிகளை உருவாக்கி அவற்றின்மூலம் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளனர்.
அதற்காக ஜெயலலிதா தரப்பிலிருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்துக்காகத்தான் அவர்கள் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் இருந்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு கிடைத்த விருதுகள், பரிசுப் பொருட்கள் அனைத்தும் சசிகலா வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக ஜெயலலிதா கூறியிருப்பது அவர்களிடையே சாதாரணமான உறவுக்கும் மேலான உறவு இருந்துள்ளது தெரிய வருகிறது.
இந்த கம்பெனிகள் இருந்தது தெரியாது என்ற ஜெயலலிதா தரப்பு வாதத்தை ஏற்க முடியவில்லை. அவர் கொடுத்த காசோலைகள் மூலம் தான் வங்கிகளில் கடன் வாங்கப்பட்டு சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன.
சார்பதிவாளரையும், தோட்டக்கலை அதிகாரியையும் போயஸ் கார்டனுக்கு வரவைத்து அங்கு பல ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவை குறைந்த மதிப்பீடு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் 6 ஆவணங்கள் வாங்குபவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாமல் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டப் பதிவாளர் வீட்டுக்கு வந்து பத்திரங்களை பதிவு செய்திருப்பது ஜெயலலிதாவுக்குத் தெரியாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எல்லாம் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்துவதற்காகத்தான்.
இவை அனைத்தும் அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
சுப்பிரமணியன் சாமியின் வாய் சும்மாவே இருக்காது போல. யாரையாவது கிண்டலடித்தபடியே இருக்கிறார்.
-
தலைமன்னார் பகுதியில் 10 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply