தங்கம் என கூறி ஈய உருண்டைகளை விற்பனை செய்த நான்கு பேர் யாழ். நாவற்குழியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் மிக நீண்ட காலமாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு கிலோ 800 கிராம் போலித்தங்க பொத்தான்கள் மற்றும் மூன்று கிலோகிராம் ஈய உருண்டைகள் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அநுராதபுரத்தை சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழ். நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply