தமிழகத்தில் அமைதியை பேணுமாறு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள் சிலர் தீக்குளித்து தமது எதிர்பபை வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் தொடர்ந்தும் அமைதியின்மை நிலவி வருவதால் எதிர்கட்சிகளிடமிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் இது போன்ற தருணங்களி்ல் மக்கள் அமைதியாக இருபப்தையே தாம் விரும்புவதாகவும் வன்முறைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, சிறைச்சாலையில் தம்மை சந்திப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் எனவும் முன்னாள் முதல்வர் ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்றைய தினமும் சிறைச்சாலை வளாகத்தில் காத்திருந்த ஆதரவாளர்களை அவர் திருப்பியனுப்பியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளையும் சந்திப்பதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment
Leave A Reply