மன வளர்ச்சி குன்றிய, வறிய இளம் பெண் ஒருவரை பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, ஆண் குழந்தை ஒன்றுக்கு தாயாராக்கிய, நான்கு பிள்ளைகளின் தந்தையான நபர் ஒருவருக்கு மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் பத்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரு வருட கடூழிய சிறைத் தண்டனையுடன், 25 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் மேற்படி தீர்ப்பை வழங்கி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிரி, இரண்டரை இலட்சம் ரூபா நஷ்டஈடாக வழங்கவேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.
ஏறாவூர் தளவாயைச் சேர்ந்த வறுமைக்குகோட்டில் வாழும், மனவளர்ச்சி குன்றிய சந்திரன் ஜெயக்குமாரி எனும் இளம் பெண்ணைப் பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, கருத்தரிக்க வைத்தார் என்று கூறி புன்னக்குடா வீதி, தளவாலையைச் சேர்ந்த வேலப்பன் புஸ்பராசா அல்லது சுரேஷ் எனும் நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 04.10.2013 இல் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நடைபெற்று வந்தது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிரியான வேலப்பன் புஸ்பராசா குற்றத்தை ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் எதிரி ஏற்கனவே திருமணம் செய்து தற்பொழுது நான்கு பிள்ளைகளின் தந்தையாகவிருப்பதால் குடும்ப நிலை மற்றும் முன் குற்றமின்மை என்பவற்றை கவனத்தில் கொண்டும், மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்குப் பிறந்து தற்போது நான்கு வயதாகவுள்ள ஆண் குழந்தை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணையும் கவனத்தில் கொண்டும் எதிரியைக் கடுமையாக எச்சரித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதன்படி எதிரி வேலப்பன் புஸ்பராசாவுக்கு பத்து வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட இரு வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையுடன் 25 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்த நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளியான புஸ்பராசா இரண்டரை லட்சம் ரூபா நஷ்டஈடு வழங்கவேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்.
தண்டப் பணமும், நஷ்டஈட்டுத் தொகையும் செலுத்த தவறினால் எதிரி மேலதிகமாக தலா ஒரு வருட கடுழியத் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, October 11, 2014
மனவளர்ச்சி குற்றிய பெண்ணை தாயாக்கிய நபருக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
மத்திய மாகாண சபைக்குற்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக மத்தியமாகாண சபை அமர்வின்போது மாகாணசபை உறுப...
-
குருநாகல் அம்பகொலவெவ பகுதியில் கடத்தப்பட்ட நான்கு வயது சிறுமி தமாரா ஹோசாலி நெரியாவ பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply