தமிழக
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமிற்கு பிணை வழங்க மறுத்த கர்நாடகா
உயர்நீதிமன்ற நீதிபதியை பின்தொடர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக
முன்னாள் முதல்வரின் பிணை மனுவை மறுத்து தீர்ப்பு வழங்கிய பின்னர் ,
நீதிபதி ஏ.வீ. சந்திரசேகர் வீடு திரும்புகையில் அவரை பின் தொடர்ந்து வீடியோ
எடுத்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து
தொலைப்பேசி, மடிக்கணணி மற்றும் கார் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக
பெங்களூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களும் இரசிக முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனையும் 100 கோடி ரூபா அபராதமும் தமிழக முன்னாள் முதல்வருக்கு விதிக்கப்பட்டது.
இந்நிலையில்
பரப்பன அக்ரஹார சிறையில் சிறைவாசம் அனுபவிக்கும் தமிழக முன்னாள்
முதல்வருக்கு பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட போதும் அந்த மனு கர்நாடகா
உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இதனை அடுத்து தமிழக
முன்னாள் முதல்வர் உள்ளிட்ட நால்வர் சார்பிலும் இந்திய உச்ச நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, October 12, 2014
ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க மறுத்த நீதிபதியை பின்தொடர்ந்த இருவர் கைது
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
மத்திய மாகாண சபைக்குற்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக மத்தியமாகாண சபை அமர்வின்போது மாகாணசபை உறுப...
-
குருநாகல் அம்பகொலவெவ பகுதியில் கடத்தப்பட்ட நான்கு வயது சிறுமி தமாரா ஹோசாலி நெரியாவ பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply