blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, September 25, 2014

செவ்வாய்க்கிரத்தின் நிழற்படங்களை பூமிக்கு அனுப்பியது மங்கள்யான்


செவ்வாய்க்கிரத்தின்  நிழற்படங்களை பூமிக்கு அனுப்பியது மங்கள்யான்செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பியுள்ள மங்கல்யான் விண்கலம் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.

மங்கல்யான் விண்கலம் முதல்முறையாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை படம்பிடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த நிழற்படங்கள் பயன்மிக்கதாக அமைந்துள்ளதாகவும் அதனை வெளியிடுவதற்கு முன்னர் ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மங்கல்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தப்பட்டமை வரலாற்று ரீதியில் எட்டப்பட்ட இலக்கு என இந்திய ஊடகங்கள் பாராட்டியுள்ளன.

அத்துடன் இந்த நிழற்படங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு காண்பிக்கப்படவுள்ளதாக  இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►