
அதற்கமைய, ஆறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதுடன் மேலும் 16 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பகுதி அளவில் இடம்பெறும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் பிரணவதாசன் தெரிவிக்கின்றார்.
கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் டீ.எஸ்.சேனாநாயாக்கா கல்லூரி மற்றும் குருநாகல் மாவட்டத்தில் ஒரு பாடசாலை, காலி மாவட்டத்தில் ஒரு பாடசாலை மற்றும் மாத்தறையில் ஒரு பாடசாலை அடங்கலாக ஆறு பாடசாலைகள் நாளை மறுதினம் தொடக்கம் 27 ஆம் திகதி வரை மூடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை மறுதினம் ஆரம்பமாகி எதிர்வரும் 27 ஆம் திகதி நிறைவுபெறவுள்ளதாகவும் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply