ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்திப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு அமெரிக்க நிவ்யோர்க் நகரில் இலங்கை நேரப்படி நேற்றிரவு இடம்பெற்றதாக ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் தாம் திருப்பதி அடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிகாட்டியுள்ளன.
மேலும், இரு நாட்டுத் தலைவர்களும் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply