
காந்திவீதி தோணிக்கல் வவுனியா எனும் முகவரியை கொண்ட நவரத்தினசாமி கிருஸாந் என்ற 16 வயதுசிறுவனொருவனே இவ்வாறு வவுனியா பொடியன் என்ற பெயரில் சமூக வலை தளமான பேஸ்புக்கில் கணக்கொண்றை இயக்கி வந்த நிலையில் பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபுலாநந்தா கல்லூரியில் சாதாரணதரத்தில் கல்வி பயிலும் இம் மாணவன் வவுனியா பொடியன் என்ற பெயரில் வவுனியாவை சேர்ந்த பல அரசியல்வாதிகள். சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், சமூகத்தில் அறியப்பட்ட பலரையும் அவாகளின் புகைப்படங்களை பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்து வந்திருந்தான்.

எனினும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு இப்பகுதி கிராம சேவகருக்கு தகவல் வழங்கப்பட்டு கிராம சேவகர் மூலமாக வவுனியா பொலிஸாரிடம் மேற்படி சிறுவன் ஒப்படைக்கப்பட்டிருந்தான்.
இதனையடுத்து சிறுவனை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply