blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, September 2, 2014

5 வயது குழந்தையை பலாத்காரம் செய்து படுகொலை!!

efef8c9c-78aa-4572-be74-9947312f683b_S_secvpfமும்பை போரிவிலி பகுதியில் 5 வயது குழந்தையை பலாத்காரம் செய்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போரிவிலியில் உள்ள ஒரு மேம்பாலத்தின் அடியில் இன்று அதிகாலை 5 வயது பெண் குழந்தை இறந்து கிடந்தது.

நடைபாதையில் இருந்து சிறிது தொலைவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த குழந்தையின் சடலத்தைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் அந்தரங்க உறுப்புகளில் காயம் இருந்தது.

இதனால் அந்த குழந்தையை யாரோ மர்ம ஆசாமி கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததுடன், கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►