முல்லைத்தீவு சாளை கடற்பரப்பில் விமான படைக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் விமானம் ஒன்றின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.வடக்கு கடற்படையினரின் சுழியோடிகளால் நேற்றிரவு விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கண்டுபிடிக்கப்ட்டுள்ள விமானத்தின் பாகங்கள் காங்கேசன்துறை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இராணுவத்தினருடன் இணைந்து சம்பவம் தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply