இந்திய மீனவர்களின் விடுதலையை பாரதத்தின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள
நரேந்திர மோடி வரவேற்பதாக தனது டுவிட்டர் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய
மீனவர்கள் சகலரையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ (25) உத்தரவிட்டார்.
இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ள நிலையில்
நல்லெண்ண நடவடிக்கையாக இவ்வுத்தரவினை ஜனாதிபதி பிறப்பித்தமை
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே நரேந்திர மோடி இதனை தெரிவித்தார். 'இலங்கை மற்றும்
பாகிஸ்தான் அரசாங்கங்கங்கள் எமது மீனர்வர்களை விடுவித்ததை வரவேற்கின்றேன்'
என அவர் தனது டுவிட்டர் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகையின் திறந்த வெளி அரங்கில் நாளை (திங்கட்கிழமை)
மாலை நடைபெறும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்காக அண்மை நாடுகளின்
தலைவர்கள் உட்பட 3000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 25, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...

No comments:
Post a Comment
Leave A Reply