இந்தியாவின் 14ஆவது பிரதமராகப் பதிவியேற்கவுள்ள நரேந்திர மோடியின்
பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தானும்
பங்கேற்கவுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா இன்று (25) தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து சனிக்கிழமை (24) இரவு வந்த அழைப்பினை
ஏற்று, தான் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, ஜனாதிபதியின் இந்த இந்திய விஜயத்தில் அமைச்சர் ஆறுமுகம்
தொண்டமானும் பங்கேற்கவுள்ளார் என இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத்
காரியவசம் அறிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமராக, நரேந்திர மோடி நாளை(26) மாலை பதவியேற்கவுள்ளார். இந்த
நிகழ்வுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், இலங்கை சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார்.
இதற்காக இன்று (25) மாலை, ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இந்தியா பயணமாகவுள்ளனர்.
இந்த இந்திய விஜயத்தில் பங்கேற்குமாறு வடமாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரனுக்கு, வெளிவிவகார அமைச்சரினூடாக ஜனாதிபதி அழைப்பு
விடுத்திருந்த போதிலும் அந்த அழைப்பை முதலமைச்சர் விக்னேஷ்வரன்
மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 25, 2014
மோடியின் பதவியேற்பு விழாவில் யாழ். மேயர், தொண்டமான் பங்கேற்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
Interview May 3,4 Contact: 071 5262026 G.C.E O/L Students can participate
No comments:
Post a Comment
Leave A Reply