“அமெரிக்க இலக்குகளின் மீது தாக்குதல் நடத்தியது நிஜமாகவே
பின்லேடன்தானா?” இப்படியொரு சந்தேகத்தை யார் கிளப்பியிருந்தால், அது அதிர
வைக்கும்? How about அமெரிக்க ஜனாதிபதி?
அந்த சந்தேகத்தை கிளப்பியிருந்தவர் பில் கிளின்டன், அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது!
தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக
அடிபடும் இந்த தகவல் எங்கிருந்து வந்தது என்றால், கிளின்டன் தனது கைப்பட
எழுதிய ஒரு குறிப்பில் இருந்து!
அமெரிக்க ஜனாதிபதியாக பில் கிளின்டன்
இருந்தபோது, அவரது ஆலோசகராக இருந்த சான்டி பெர்கருக்கு எழுதிய அந்த
குறிப்பு, லீக் ஆகியிருந்தது. அதுவே தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
(இந்த குறிப்பு பற்றிய தகவலை லீக் செய்தவரே, சான்டி பர்கர்தான்)
இந்தக் குறிப்பு லீக் ஆனபோது
ஏற்பட்டதைவிட, தற்போது பரபரப்பு கூடியுள்ளதன் காரணம், இந்த விவகாரம்
இப்போது புதிய ஆங்கிளில் திருப்பப்படுகிறது.
“அமெரிக்க இலக்குகளை தாக்கியதன்
பின்னணியில் அல்-காய்தா இருந்தது என்பதை 100 சதவீதம் கிளின்டன் நம்பவில்லை
என்று இந்தக் குறிப்பில் இருந்து தெரிகிறது. அதனாலேயே, பின் லேடனை பிடித்து
ஒப்படைக்கிறோம் என சூடான் சொன்னபோது, கிளின்டன் நிர்வாகம் அந்த டீலை பேசி
முடிக்கவில்லை. பின்லேடன் உயிருடன் இருந்ததால்தான் பின்னாட்களில் செப்.11
தாக்குதல் நடந்தது” என்பதே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆங்கிள்!
பில் கிளின்டனால் 1999-ல் எழுதப்பட்ட குறிப்பு அது. அதன் பின்னணி என்ன?
1998-ல் கிழக்கு ஆபிரிக்காவில்
அமெரிக்காவின் இரு தூதரகங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதை
அடுத்து, சூடானிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள இரு அல்-காய்தா இலக்குகள்
மீது தாக்குதல் நடத்த இதே பில் கிளின்டன் உத்தரவு கொடுத்திருந்தார்.
ஆப்கானிஸ்தானில் பின் லேடனின் படை முகாம்
ஒன்றும், சூடானில், அல்-காய்தாவின் கெமிகல் ஆயுத தொழிற்சாலை என
சந்தேகிக்கப்பட்ட இடம் ஒன்றும்தான் தாக்குதல் இலக்குகளாக இருந்தன.
அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. அப்போது
கிளின்டனுக்கு கொடுத்திருந்த உளவு அறிக்கையில், “அமெரிக்க தூதரகங்கள்
மீதான தாக்குதல்களின் பின்னணியில் அல்-காய்தா இருந்தது” என அடித்து
கூறியிருந்தது. சி.ஐ.ஏ. கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே, ஆப்கானிலும்,
சூடானிலும் தாக்குதல்களை நடத்த கிளின்டன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், நியூயார்க் டைம்ஸ்
பத்திரிகையில், இது தொடர்பான கட்டுரை ஒன்று வெளியானது. அந்த கட்டுரையில்,
அமெரிக்க இலக்குகளை (தூதரகங்களை) தாக்கியது அல்-காய்தாதான் என்பதற்கு போதிய
ஆதாரங்கள் கிடையாது என சந்தேகம் எழுப்பப்பட்டு இருந்தது.
மிக திறமையாக எழுதப்பட்டிருந்த அந்த
கட்டுரையை அப்போதைய ஜனாதிபதி கிளின்டன் படித்ததன் விளைவே, அவர் தமது
ஆலோசகர் சான்டிக்கு, “நம்மை ஒருவேளை சி.ஐ.ஏ. கொஞ்சம் அதிகமாகவே உசுப்பேற்றி
விட்டதோ” என்று எழுதிய இந்தக் குறிப்பு:
No comments:
Post a Comment
Leave A Reply