உகாண்டாவின் நபிகிங்கோ (Nabigingo) நகரை சேர்ந்த பால் முகிசா (Paul Mukisa) என்ற ஆண் குழந்தை, நான்கு கை மற்றும் கால்களுடன் பிறந்துள்ளது
இக்குழந்தையை பெற்றோர் மருத்துவரிடம் காண்பித்த போது, எதுவும் செய்ய முடியாது என கூறி மருத்துவர்கள் கைவிரித்துள்ளனர்.
இதன்பின் தலைநகர் கம்பலாவில் (Kampala) உள்ள (Mulago Hospital) முலாங்கோ மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தபோது, அதன் இரண்டு கை கால்கள், முதுகு எலும்பு, கல்லீரல் மற்றும் இருதயம் இடம் மாறி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தைக்கு சிகிச்சை செய்ய வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக மூன்று மாதம் வரை அதன் உறுப்புகளை வளரவிட்டு பின்பு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தபின் தற்போது முகிசா ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என கூறப்படுகிறது
No comments:
Post a Comment
Leave A Reply