blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, April 24, 2014

தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் மத்திய மாகாண சபை; உறுப்பினர் கனகராஜ்

மத்திய மாகாண சபைக்குற்பட்ட அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக மத்தியமாகாண சபை அமர்வின்போது மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
பல்லேகல மாகாணசபை கட்டிட தொகுதியில் அவைத் தலைவர் மகிந்த அபயகோன் தலைமையில் நடைபெற்றது மத்திய மாகாணசபை அமர்வின் போது உரையாற்றிய கணபதி கனகராஜ் இதனை தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிகையில்.

வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு அடுத்தபடியாக தமிழ் மொழி பேசுகின்ற அதிகளவு மக்களை கொண்டுள்ளது மத்திய மாகாணம்.

மத்திய மாகாண அரசு தமிழ் மொழியை புறக்கணித்து செயற்படுவதன் மூலம் மாகாணசபை உருவாக்கப்பட்டதற்கான அடிப்படை நோக்கத்தையே உதாசீனம் செய்துவருகிறது.

எமது மாகாண முதலமைச்சரின் காரியாலயத்திலிருந்து வரும் கடிதங்களை தவிர ஏனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் தமிழ்மொழி அமுலாக்கத்தின் அவசியத்தை உணராமல் செயற்படுவதால், தமிழ்ப் பாடசாலைகள், உள்ளுராட்சி மன்றங்கள், ஏனைய அரச நிறுவனங்கள் போன்றவற்றுடனான தொடர்பாடல்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பலமுறை சுட்டிக்காட்டியும் இதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியவில்லை. சட்டங்களை ஏட்டளவில் மட்டும் வைத்துக்கொள்ளாமல் அவற்றை மக்கள் பயன்பெறும் விதத்தில் நடைமுறைப்படுத்த சாத்தியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தமிழ்மொழி நாட்டில் அரச கரும மொழியாக பிரகடணப்படுத்தப்பட்டதன் பின் அதன் அமுலாக்கம் குறித்து பல்வேறு சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

ஏதாவது ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் இருபத்தைந்து வீத தமிழ்மொழி பேசுபவர்கள் இருந்தால் அந்த பிரதேச செயலாளர் பிரிவில் சிங்கள மொழியுடன் தமிழ் மொழியும் நிர்வாக மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அரசாங்க சுற்றுநிருபம் தெரிவித்தாலும், மத்திய மாகாணத்தில் எந்தவொரு பிரதேச செயலாளர் பிரிவிலாவது தமிழ் மொழி நடைமுறைப்படத்தப்படுகிறதா?

மாகாண சபையின் தமிழ்  உறுப்பினர்களுக்கு வருகின்ற கடிதங்களில் 90 வீதமானவை சிங்கள மொழியிலேயே வருகின்றன.

இதனால் நாம் எமது நிர்வாக வேலைகளை செய்துகொள்ள முடியாமலும், காலதாமதத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துவிடுகிறது. ஆகவே இந்தவிடயத்தை மிகவும் அவசரமாக அணுகி தீர்க்கப்படவேண்டிய விடயமாக கருதி உரிய நடவடிக்கைகளுக்கு மத்திய மாகாண சபையின் தலைவர் உத்தரவிட வேண்டும்.

தேவையேற்படின் அரசசேவையிலிருந்து மொழிபெயர்ப்பாளர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவும் கணபதி கனகராஜ் வேண்டுகோள்விடுத்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►