மஹியங்கனை பிரதேச சங்க சம்மேளனம் வட்டருக்க தேரர்ரை அகற்ற தீர்மானித்துள்ளதாக கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் வட்டருக்க தேரரை தேடி ரிசாத் பதியூதின் அமைச்சுக்கு சென்றதாகவும் வட்டருக்க தேரர் அங்குதான் இருந்தார் எனவும் தேரர்கள் என்ற முறையில் பொய் கூறவில்லை எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தங்களுடைய தேவைகளுக்காக காவி உடையை பயன்படுத்த வேண்டாம் என அமைச்சர் ரிசாத் பதியூதினை கேட்டுக் கொள்வதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் அமைச்சர்களுக்கு காவி ´ஹராம்´ என அவர் குறிப்பிட்டார்.
மத விவகாரங்கள் குறித்து செயல்பட பொலிஸ் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தாம் பல காலமாக வலியுறுத்தி வந்த ஒன்று எனவும் தேரர் கூறினார்.
எனவே இனி மத எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவோரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நாட்டில் உள்ள அனைவரும் உத்தியோகபூர்வமற்ற பொலிஸாராக மாற வேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply