
இந்த மீனவர்களின் 4 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் லால் டி சில்வா குறிப்பிடுகின்றார்.
இந்திய கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் இலங்கை கடற்படையினரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கூறினார்.
காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடற்பரப்பில் நேற்று மாலை 5.45 அளவில் இலங்கை மீனவர்களை பொறுப்பேற்றதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரண்டு கடற்படைப் படகுகள் மூலம் மீனவர்கள் காங்கேசன்துறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தேவேந்திரமுனை, வென்னப்புவ, சிலாபம் பகுதிகளில் இருந்து கடலுக்குச் சென்றிருந்த மீனவர்கள் சிலரே இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.
இந்த மீனவர்கள் தங்களின் சொந்த இடங்களை நோக்கித் திரும்புவதற்குத் தேவையான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதுடன், இன்னும் சற்று நேரத்தில் அவர்களை அனுப்பிவைக்கவுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply