ஸ்கொட்லாந்தின் க்ளஸ்கோ நகரில் நடைபெற்ற 20 ஆவது பொதுநலவாய விளையாட்டு இன்று அதிகாலை நிறைவுபெற்றுள்ளது.
சிறந்த கௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் பதக்கப்பட்டியலில் இங்கிலாந்து முன்னிலை பெற்றிருந்த நிலையில் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன.
71 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 4 ,500 க்கும் அதிகமான வீர வீராங்கனைகள் பங்கேற்ற பொதுநலவாய விளையாட்டு விழா கடந்த 11 நாட்களாக நடைபெற்றிருந்தது.
இந்த விளையாட்டு விழாவை 11 மில்லியன் மக்கள் கண்டு களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 174 மொத்தப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்ட இங்கிலாந்து பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.
49 தங்கம் 42 வெள்ளி 46 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 137 பதக்கங்களைப் பெற்றுக்கொண்ட அவுஸ்திரேலயா பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
32 தங்கப் பதக்கங்களுடன் கனடா மூன்றாம் இடத்தையும் 19 தங்கப் பதக்கங்களுடன் ஸ்கொட்லாந்து 4 ஆம் இடத்தையும் பெற்றன.
இந்தியா 15 தங்கப் பதக்கங்களை பெற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்த அதேவேளை நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, நைஜிரியா, கென்யா, ஜமேக்கா ஆகிய நாடுகள் அடுத்த அடுத்த இடங்களைப் பளுதூக்கல் போட்டியில் வெள்ளிப் பதக்கமொன்றை மாத்திரம் பெற்றுக்கொண்ட இலங்கை 29 இடத்தைப் பெற்றுக்கொண்டது.
29 வயதான சுதேஷ் பீரிஸ் ஆவடருக்கான 62 கிலோகிராம் எடைப் பிரிவில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கதை பெற்றுக்கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த பொதுநலவாய விளையாட்டு விழா அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply