blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, August 4, 2014

உயர்தரப் பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி -பரீட்சைகள் திணைக்களம்


உயர்தரப் பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி -பரீட்சைகள் திணைக்களம்கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


உயர்தரப்பரீட்சை நாளை முதல் எதிர்வரும் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

நயினாதீவு மற்றும் நெடுந்தீவு உட்பட நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 2,120 பரீட்சை நிலையங்களில் இம்முறை உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.

இதில் இரண்டு இலட்சத்து 96,313 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

இம்முறை உயர்தரப்பரீட்சை ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்காக 21 ஆயிரத்திற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பரீட்சைக்காக , 295 இணைப்பு நிலையங்கள் 24 மணித்தியாலங்களும் இயங்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு பூராகவும் உள்ள பரீட்சை நிலையங்களை கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்கள் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன இதேவேளை, பரீட்சார்த்திகளுக்காக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட வழிகாட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் குறைந்தபட்சம் அரைமணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சார்த்திகள் பரீ்ட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பரீட்சை அனுமதிப்பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் அவசியமானதுடன் பரீட்சை அனுமதிப்பத்திரத்தில் கையொப்பமிடப்பட்டு இருப்பது கட்டாயம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரவித்தார்.
பரீட்சைக்கு தேவையான உபகரணங்களை பரீட்சை நிலையத்திற்கு எடுத்துவருமாறும் கையடக்க தொலைபேசி,கணிப்பான் போன்றவற்றை எடுத்துவருவது.

தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் கட்டிடத்தை நிர்மாணித்தல், வகுப்புக்களை நடத்துதல், நிகழ்வுகள், கூட்டங்கள்,விளையாட்டுக்கள்,போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►