blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, August 4, 2014

ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் மக்களை ஏமாற்றுவதற்காக புதிய வியூகங்களை செயற்படுத்தி வருகின்றனர்!

தேர்தல்களில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாவது மட்டும் முக்கியமானதல்ல.


அந்த வெற்றி மூலம் தமது பகுதியையும் மக்களையும் வளர்ச்சியடையச் செய்ய போராடுபவர்களே உண்மையான மக்கள் பிரதிநிதி என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்தார்.

கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டி மக்களது வாழ்வாதார மேம்பாட்டை ஆராயும் முகமாக அப்பகுதி சமுர்த்தி உத்தியோகத்தரால் ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு பொருளாதார அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

பெரும்பான்மையின மக்கள் அனுபவிக்கக் கூடிய எல்லாவற்றையும் தமிழ் மக்களும் அனுபவிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இலங்கை அரசுடன் தன்னிடம் உள்ள அரசியல் பலத்தை வைத்து மக்களுக்கான அபிவிருத்திகளை பெற்றுக்கொடுத்து வருகின்றார். 

உயிர்களையும் உடைமைகளையும் பறிகொடுத்து தமிழர்களது ஒரு சந்ததியை அபிவிருத்தியிலும் அரசியலிலும் அழிந்துபோக வைத்த போராட்டத்தின் பிடியிலிருந்த தமிழ் மக்கள் அனைவரும் மீளவேண்டும் என்பதை மையமாக கொண்டுதான் தமிழர்கள் அனைவரது செயற்பாடுகளும் அமைய வேண்டும்

தமிழ் மக்களை பொறுத்தவரை நீண்டகாலமாக அரசியல் தலைமையை சரியானவர்களது கையில் கொடுக்கத் தவறியவர்களாகவே உள்ளனர். இதனால் தான் இயன்றளவும் வாழ்வாதாரத்திற்கு கூட மற்றவர்களது உதவிகளை எதிர்பார்க்கும் இனமாக இருக்கவேண்டியுள்ளது

கடந்த தேர்தலில் கூறிய எவற்றையும் நடைமுறைப்படுத்தாமையால்  தமிழ்த்தேசியம் கூறுபவர்கள்  இனி மக்களிடமிருந்து ஒதுங்கி விடுவார்கள் என்று நினைத்துவிடக்கூடாது.

அவர்கள் ஒவ்வொரு அரசியற் பருவகாலத்திலும் மக்களை ஏமாற்றுவதற்காக பல புதிய வியூகங்களை திரட்டி வைத்திருப்பார்கள்.

வரவுள்ள சந்தர்ப்பத்தையாவது உங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள சரியான தலைமையை தேர்ந்தெடுக்க தமிழ் மக்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும்..

அன்று நாங்களும் ஆயுதம் ஏந்திய அமைப்பு என்ற காரணத்தால் தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆயுதத்தை கைவிட்ட நாளிலிருந்து மக்களது அபிவிருத்தியில் தனது சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் அக்கறை செலுத்தி செய்து வருகின்றார்.

போரினால் அழிக்கப்பட்ட எமது மக்கள் தற்போது தான் ஓரளவு அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.

அதைக் கூட தடுத்து நிறுத்த உங்கள் வாக்குகள் மூலம் மாகாணசபையை கைப்பற்றியவர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் ஈ.பி.டி.பியின் தென்மராட்சி இணைப்பாளர் சாள்ஸ், நகரசபை உறுப்பினர் திருக்குமரன், மெடிஸ்கோ, செந்தூரன், சமுர்த்தி உத்தியோகத்தர் கல்பனா, ஆகியோருடன் அப்பகுதி  மக்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►