blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, August 12, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் அட்டூழியங்கள்: பின்லேடன் மறைவிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம கடிதம்

ஐ.எஸ்.ஐ.எஸ் செயல்பாடுகள் குறித்து எச்சரிக்கக் கூடிய கடிதம் ஒன்று, பின்லேடனின் மறைவிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட இடத்தில், அவரது அமைப்பினர் ஒருவர் எழுதி வைத்த 21 பக்க கடிதம் ஒன்றும் அப்போது கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்தக் கடிதத்தில், தற்போது உருவாகி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயல்பாடுகள், பிற்காலத்தில் மிக மோசமானதாக இருக்கும் என எழுதப்பட்டுள்ளது.

குறிப்பாக குளோரின் நச்சு வாயுப் பயன்பாடு, மசூதிகள் தகர்ப்பு, ஆயுதங்கள் தயாரிப்பு போன்றவற்றில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் ஈடுபட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதம் எச்சரித்தபடியே இன்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் விஸ்வரூபமெடுத்து, சிரியா மற்றும் ஈராக்கில் பகுதிகளை கைப்பற்றியதுடன், அங்குள்ள மக்களை கொன்று குவித்து வருகிறது.

இதுவரை இந்த இயக்கத்தில் மொத்தம் 10 ஆயிரம் பேர் வரை இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களில் பெரும்பாலானோர் ஈராக் முன்னாள் ஜனாதிபதி சமாத் உசேன் ஆட்சிக் காலத்தில் ராணுவத்தில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் நியூஸ்தமிழ் வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.     

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►