சீனாவில் 26 முறை திருமணம் செய்து கொண்டுள்ள பெண் ஒருவர் புதிய சட்ட சிக்கல் ஒன்றில் மாட்டியுள்ளார்.
சீனாவின்
ஜியாங்சு மாகாணத்தின் சுயாங் மாவட்டத்தைச் சேர்ந்த அசராமல் (40) என்ற
பெண்மணி,தனது முன்னாள் கணவரை விவகாரத்து செய்து விட்டு இரண்டாவது முறையாக
திருமணம் செய்துள்ளார்.
தற்போது கருவுற்றிருக்கும் இவர்,தனது இரண்டாவது திருமணத்தைப் பதிவு
செய்யப் போனபோதுதான், அந்தக் கணவருக்கு மற்றொரு பெண் மூலம் ஏற்கனவே இரண்டு
குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சீனாவில் சமீப காலம் வரை 'ஒரு குடும்பம் ஒரு குழந்தை' என்ற கொள்கை தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால் இந்தக் கொள்கையை அரசு சிறிது தளர்த்தி தற்போது இரண்டாவது
குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளதால், சட்டப்படி அந்தக்
கணவர் மூன்றாவது குழந்தைக்குத் தந்தையாக முடியாது.
எனவே இந்த சிக்கலைத் தீர்க்கும்பொருட்டு அந்தப் பெண் இவரை விவாகரத்து
செய்துவிட்டு, மீண்டும் பழைய கணவரை மணந்து கொள்ள முடிவு
செய்துள்ளார்.இதற்கு அவரது முன்னாள் கணவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்தப் பெண் இதுவரை 15 ஆண்களை திருமணம் செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களில் 9 பேரை மறுமணமும் செய்துள்ளார்.
தற்போது இந்த இரண்டு கணவர்களையும் சேர்த்து 26 முறை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply