கடந்த 17ம் திகதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த போயிங் 777 விமானம், ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் சுடப்பட்டதால், விமானத்தில் பயணித்த 293 பேரும் பலியாகியுள்ளனர்.
அவர்களில் 193 பேர் நெதர்லாந்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் பலியானவர்களை அடையாளம் காணும் பணியில் டச்சு அரசு ஈடுபட்டுள்ளதுடன், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து டச்சு பாதுகாப்பு வாரியத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், முதற்கட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு ஏற்ற போதுமான தகவல் எங்களிடம் உள்ளது என்றும் அது தொடர்பான பணி இன்னும் சில வாரங்களில் நிறைவடையும் என நாங்கள் நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply