ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ள இங்கிலாந்தை சேர்ந்தவர் கதீஜா டேர்(Kathija Dare- age 22) . இவர் லண்டனில் லெவிஷாம் (Lewisham) பகுதியில் முன்பு வசித்து வந்துள்ளார்.
இவரது கணவர் ஸ்வீடனைச் சேர்ந்தவர். இவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டவர்தான். தற்போது இருவரும் ரக்கா நகரில் தங்களது மகனுடன் இருக்கின்றனர்.
முஹாஜிரா பி ஷாம்(Muhajirah fi sham) என்ற பெயரில் டீவிட்டரில் இருக்கும் இந்த பெண்மணி கூறியதாவது, அமெரிக்க பத்திரிகையாளரை கொன்றதால் அல்லாவுக்கே புகழ் உண்டாகட்டும்.
இங்கிலாந்து இப்போது ஆடிப் போயிருக்கும். நான் ஒரு அமெரிக்க அல்லது இங்கிலாந்து பிணையாளியை தலையை வெட்டிக் கொன்று, அப்படிச் செய்த முதல் இங்கிலாந்துப் பெண் என்ற பெயரைப் பெற விரும்புகிறேன் என டீவிட் செய்துள்ளார்.
இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு துண்டிக்கப்பட்ட தலைகள் அடங்கிய புகைப்படங்களையும் போட்டு வைத்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply