இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ALS பனிக்கட்டிக் குளியல் சவாலுக்கு
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல் மாகாண சபையின்
உறுப்பினரும், அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் மகளுமான மல்சா குமாரதுங்க
அழைத்துள்ளார்.உடம்பின் தசைத் தொகுதியை செயலிழக்கச் செய்யும் தீவிர நரம்பு வியாதியான ALS (Amyotrophic lateral sclerosis) குறித்த விழிப்புணர்வு மற்றும் அந்த வியாதிக்கு எதிரான நிதி சேகரிப்பிற்காக சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பனிக்கட்டிக் குளியல் பரப்புரை சமூக ஊடகங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையிலேயே, நேற்று வியாழக்கிழமை தனக்கு விடுக்கப்பட்ட ALS பனிக்கட்டிக் குளியல் சவாலை ஏற்றுக்கொண்டு குளிர்நீர் குளியல் போட்ட மல்சா குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பிர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரை பனிக்கட்டிக் குளியல் சவாலுக்கு அழைத்துள்ளார்
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply