
இந்த உயிர்க்கொல்லி நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கவில்லை. எனவே அமெரிக்கா தயாரித்த ‘ஷ்மாப்’ என்ற மருந்தை அதிகாரப்பூர்வமின்றி நோய் தாக்கியவர்களுக்கு வழங்கி சிகிச்சை அளிக்க உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கி உள்ளது.
அதன்மூலம் முதன் முதலாக இங்கிலாந்தை சேர்ந்த வில்லியம் போலாவுக்கும், அதைத் தொடர்ந்து 2 அமெரிக்க டாக்டர்களுக்கும் எபோலா மருந்து பரிசோதனை முறையில் வழங்கப்பட்டது. அவர்கள் முற்றிலும் குணமடைந்து உயிர் பிழைத்தனர்.
அதே நேரத்தில் இந்த மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட லைபீரியன் டாக்டர் மற்றும் அந்நாட்டை சேர்ந்த 3 பேர், ஸ்பெயின் பாதிரியார் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். எனவே இந்த மருந்தை நோய் பாதித்த மனிதர்களுக்கு வழங்குவதில் குழப்பமும், சிக்கலும் ஏற்பட்டது.
எனவே ‘ஷ்மாப்’ என்ற மருந்தை ‘சேஸ் மகாகுயஸ்’ இனத்தை சேர்ந்த ‘எபோலா’ நோய் தாக்கிய 18 குரங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதில் குரங்குகளுக்கு ‘எபோலா’ நோய் முற்றிலும் குணமடைந்தது. குரங்குகள் அனைத்தும் உயிர் பிழைத்தன.
அதைத்தொடர்ந்து இந்த மருத்துவ பரிசோதனை வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் நோய் குணமாவதில் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வித்தியாசம் குறித்து குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மருந்தின் தரத்தை மேம்படுத்தி மனிதர்களிடம் விரைவில் பரிசோதனை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply