வடக்கில், புலிகளின் தலைவர் பிரபாகரனின் நண்பர்களையும் கிழக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கூட்டத்தையும் வைத்துக் கொண்டு,
எதிரணியினர் ஆட்டம் காட்டி வருகின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தெபருவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, கிழக்கில் தனியானதொரு முஸ்லிம் வலயத்தை வழங்குமாறு ரவூப் ஹக்கீம் என்னிடம் கோரினார். நாம் எப்படி அவ்வாறானதொரு தனி வலயத்தை முஸ்லிம்களுக்கு கொடுக்க முடியும்.
எனக்கு இவ்வளது வாக்குகள் இருக்கின்றன என்றும் அவர் என்னிடம் கூறினார். உங்களுடைய வாக்குகளை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய நாட்டை நான் பார்த்துக் கொள்கிறேன் என நான் அவருக்கு சொல்லிவிட்டேன்.
சஜித் பிரேமதாசவுக்கு இப்போது ஐக்கிய தேசியக் கட்சி வெறுத்துப் போய்விட்டது என்று எனக்கு தெரியும். இருந்தாலும் அவர் எங்கள் கட்சியில் இணைய வேண்டாம் என்றே நான் கோருகிறேன். ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது.
அதனால், அவர் அந்த பணியில் மும்முரமாக ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என ஜனாதிபதி மேலும் கூறினார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, January 7, 2015
பிரபாகரனின் நண்பர்களையும், ஹக்கீமின் கூட்டத்தையும் வைத்து ஆட்டம் காட்டுகிறது எதிரணி - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
தலைமன்னார் பகுதியில் 10 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,
No comments:
Post a Comment
Leave A Reply