பிரித்தானியாவில் நபர் ஒருவர் காதல் தோல்வியினால் தனது காதலி ஓட்டி வந்த ரயில் முன் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.பிரித்தானியாவின் ஃபோர்ட்வில்லியம் (Fortwilliam) நகரை சேர்ந்த கேரி வெல்ஸ் (Gary Wells- age 36), மெக்டோணால்ட் (MacDonald) ஆகியோர் காதலித்து வந்துள்ளனர்.
சமீபத்தில் இந்த ஜோடிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவே, மெக்டோணால்ட், வெல்ஸுடன் தனது காதலை முறித்து கொண்டுள்ளார்.
இந்த பிரிவை தாங்க முடியாத வெல்ஸ், தனது காதலி ஓட்டி வந்த ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு இந்த ரயிலை ஓட்டி வந்தது தனது காதலி தான் என தெரியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதுகுறித்து மெக்டோணால்ட் தோழிகள் கூறுகையில், மெக்டோணால்ட் மிகவும் வேதனையாக இருக்கிறாள் என்றும் அவள் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply