இந்தியாவை சேர்ந்த சிறுவனான எட்டு வயது சிறுவனான கலீமுக்கு அவனது தலையை விட கைகள் பெரிதாக உள்ளது வருத்தத்தை தருகிறது.
மருத்துவத்துறையோ அவனது கைகளின் வளர்ச்சியை பார்த்து குழம்பிப்போய் கிடக்கிறது.
பிறக்கும்போதே இயல்பான குழந்தைகளின் விரல்களை விட இரு மடங்கு பெரிதாக கலீமின் விரல்கள் இருந்துள்ளது. தொடர்ந்து நாளுக்கு நாள் விரல்களின் வளர்ச்சி மேலும் மேலும் பெரிதானது.
அவனது உள்ளங்கையிலிருந்து நடுவிரலின் முடிவு வரை கணக்கிட்டால் 13 இஞ்ச் அளவுக்கு அவனது கைகள் வளர்ச்சியடைந்துள்ளது தெரிகிறது. மிகவும் அபரிதமான கைகளின் வளர்ச்சியால் இச்சிறுவன் ஷு லேஸ் கட்டுவதற்கும், உடைகளை அணிந்து கொள்வதற்கும் மற்ற செயல்களை செய்வதற்கும் சிரமப்படவேண்டியுள்ளது.
தன்னை பார்த்து மற்றவர்கள் பயப்படுவதால் தனது வாழ்க்கையே தனிமையில் கழிவதாக சிறுவன் கலீம் சோகத்துடன் கூறியுள்ளான்.
மாதம் ஒன்றிற்கு 1500 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் கலீமின் பெற்றோர் தங்கள் சக்திக்கு ஏற்ற வகையில் அவனது சிகிச்சைக்கு செலவு செய்துவருகின்றனர். ஆனால் அவனை பரிசோதிக்கும் மருத்துவர்களோ குழம்பிப்போய்விடுவதாக அவனது பெற்றோர்கள் கூறுகின்றனர்.
கைகளின் வளர்ச்சியை தவிர்த்து பார்த்தால் கலீம் நல்ல நலத்துடன் இருப்பதாக கூறியுள்ள மருத்துவர் ஒருவர், அவன் லிம்பாஞ்சியோமா அல்லது ஹமார்டோமா நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இரண்டுமே உடலின் குறிப்பிட்ட பாகத்தில் அதிகப்படியான வளர்ச்சியை தரும் நோய் ஆகும். தங்கள் மகனுக்கு என்றாவது ஒரு நாள் நல்லது நடக்கும் என்று நம்பிக்கையுடன் கூறிய அவனது பெற்றோர்களான ஷமிம்-ஹலீமா தம்பதியர் அதுவரை தாங்கள் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தனர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 விமானிகள் இறந்தனர். தலைநகர் இஸ்லாமா...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
No comments:
Post a Comment
Leave A Reply