பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையில் 469
பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள்
மேம்பாட்டு அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.காஸா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் இயக்கத்தினரை அழிக்கிறோம் என்ற பெயரில் பாலஸ்தீன நாட்டில் கொடுந்தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இத்தாக்குதலில் சுமார் 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.
மொத்தம் 10 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். சுமார் 3 லட்சம் பேர் அகதிகளாக வாழ்விடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
எகிப்தின் முன்முயற்சியில் அவ்வப்போது யுத்த நிறுத்த ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படுவதும், மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகிவிட்டது.
இந்நிலையில் யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் மொத்தம் 469 பிஞ்சு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply