இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை 105 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம்
டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
அதோடு இலங்கையின் மூத்த வீரர் மஹெல
ஜெயவர்த்தன இப்போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக
அறிவித்திருந்ததால், இவ்வெற்றி அவருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 320 ஓட்டங்களை எடுத்தது.
தரங்க 92 ஓட்டங்களை எடுத்தார். பதிலுக்கு பாகிஸ்தான் அணி 332 ஓட்டங்களை
எடுத்தது.
கீப்பர் சர்ஃப்ராஷ் அஹ்மட் 103 ஓட்டங்களை எடுத்தார்.
பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 9 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு
இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 282
ஓட்டங்களை எடுத்தது.
சங்ககார 59 ஓட்டங்களையும், ஜெயவர்த்தன 54
ஓட்டங்களையும் எடுத்தனர். இதையடுத்து பாகிஸ்தான் அணிக்கு இலக்காக 271
ஓட்டங்கள் நியமிக்கப்பட்டது.
ஆனால் 165 ஓட்டங்களுக்குள் சகல
விக்கெட்டுக்களையும் இழந்தது. ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
போட்டி நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் ஹேரத்தே தெரிவானார்.
இப்போட்டியின் பின்னர் கொழும்பு SSC மைதானம் மஹெல ஜெயவர்த்தனவுக்கு
வழங்கிய பிரியாவிடை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. இது எனக்கு
உணர்ச்சிகரமான நாள் தான்.
ஆனால் நான் அழமாட்டேன் என உங்களுக்கு வாக்குறுதி
அளிக்கிறேன் என மஹெல ஜெயவர்த்தன தெரிவித்தார்.
ஓய்வின்
பின்னர் தான் அரசியல் பக்கம் போகமாட்டேன். என் மனைவி என்னைத்
துரத்திவிடுவாள்.
அவளுக்கு அது பிடிக்காது என நகைச்சுவையாக கூறிய மஹெல,
மேலும், “முதன் முறையாக இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்து டெஸ்ட்
போட்டியில் விளையாடத் தயாரான அந்நாள் என் நாளில் மறக்கமுடியாது.
Dressing
Room இல் வைத்து, கேப்டன் அர்ஜுண ரணதுங்க எனக்கான தொப்பியைகொடுத்து
வாழ்த்துக்களை கூறினார்.
இன்றுவரை தொடர்ந்து 15 வருடங்களுக்கு மேலாக
அத்தொப்பியை பயன்படுத்திவருகிறேன்.
சங்ககாரவும் அதே போன்றே அத்தொப்பியை
பயன்படுத்திவருகிறார். இன்று இறுதிமுறையாக அத்தொப்பியை அணிந்திருக்கிறேன்.
குமார் சங்ககார எனது மிகச்சிறந்த நண்பன். என்னைப் பொருத்தவரை 6
வருடங்களுக்கு மேலாக துடுப்பாட்ட தரவரிசையில் அவர் தான் முதலிடத்தில்
இருக்கிறார். ஒரு நல்ல நண்பனாக அவருடைய சாதனை நினைத்து நான்
பெருமைப்படுகிறேன்” எனக் கூறினார்.
ஜெயவர்த்தனவின் 19 டெஸ்ட் சதங்கள்
சங்ககாரவுடன் களத்தில் நின்ற போது எடுக்கப்பட்டவை ஆகும். இலங்கையில்
பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டை செம்மைப்படுத்தும் நபர்களுடன் இணைந்து
மஹெல ஜெயவர்த்தன தொடர்ந்து செயற்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
-
இந்திய, கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ALS பனிக்கட்டிக் குளியல் சவாலுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல் மாகாண சபையின் உறுப்ப...
No comments:
Post a Comment
Leave A Reply