blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, August 19, 2014

ஐநா விசாரணைக்கான சாட்சியங்கள் இலங்கைக்குள் இரகசியமாக திரட்டப்படுகிறது; அலறுகிறது இலங்கை!

இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கான சாட்சியங்கள் இலங்கைக்குள் திரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற பலத்தை சந்தேகத்தை அரசு நேற்று வெளியிட்டுள்ளது.


பாணந்துறையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சமயத்தில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இதனை தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கொழும்பில் ஒன்றுகூடியது கூட இதற்காகத்தான் என பதைபதைத்துள்ளார்.

“காணாமல் போனவர்களின் உறவினர்களின் 20 குடும்பங்கள் அண்மையில் கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களில் பலருக்கு தாம் எதற்காக கொழும்பு அழைத்துவரப்பட்டோம் என்பதே தெரியவில்லை.

யார் அந்த பயணத்தை ஏற்பாடு செய்தார்கள் என்பதையும் அறிந்திருக்கவில்லை.

வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்த அந்த கூட்டத்தில் ஒலிப்பதிவு கருவிகளும் இருந்தன.

மிக சூட்சுமமான முறையில் இலங்கைக்குள் வைத்து சர்வதேச விசாரணைக்கான சாட்சியங்கள் திரட்டப்படுகின்றன என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக பெருந்தொகைப்பணம் தண்ணீராக இறைக்கப்படுகிறது” என தெரிவித்தார்.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.     

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►