வவுனியா, ஓமந்தை, கொந்தக்காரன் குளம் பகுதியில் மீள்குடியேறி இருந்த
வீடடின் சுவர் திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் இடிந்து விழுந்ததில்
சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா,
ஓமந்தை, கொந்தக்காரன் குளம் பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு சேவாலங்கா
நிறுவனத்தால் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது.
திங்கட் கிழமை மாலை
குறித்த பகுதியில் மழை பெய்திருந்த நிலையில் வீட்டின் உற்பகுதியை நோக்கி
மோட்டர் சைக்கிளை வீட்டு வாசல் ஊடக ஏற்றிய போது, மோட்டர் சைக்கிள் கதவு
நிலையுடன் மோதியதையடுத்து நிலையுடன் இணைந்திருந்த சுவர் இடிந்து
விழுந்துள்ளது.
இதனால் மோட்டர் சைக்கிளுக்கு அருகில் நின்ற சிறுவன்
சுவருக்குள் அகப்பட்டு காயமடைந்துள்ளார்.
உடனடியாக சிறுவனை வவுனியா
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் முயற்சி வெற்றியளிக்காது சிறுவன்
மரணமடைந்துள்ளார். இச் சம்பவத்தில் கொந்தக்காரன் குளத்தைச் சேர்ந்த எஸ்.
தாரகன் (வயது 4) என்ற சிறுவனே மரணமடைந்தவராவார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, August 19, 2014
மீள்குடியேற்ற வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நைஜிரியாவில் கடத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போஹோ ஹராம் ஆயதாரிகளால் கடத்தப்பட்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
மன்னார், மருதனார்மடு பகுதியில் மிருகவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
மாத்தளை மற்றும் பதுளை மாவட்டம் - தபால்மூல வாக்கு முடிவுகள்:
No comments:
Post a Comment
Leave A Reply